தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன
வடக்கிற்கான தேசிய விரைவு
நெடுங்சாலையின் முதற்கட்டம், கொழும்பின் வெளிப்புறத்தில் உள்ள எந்தரமுல்லை வெளியக முனையத்தில் இருந்து கம்பகா, வியாங்கொட மீரிகம, குருநாகல வழியாக தம்புள்ள வரை அமையவுள்ளது.
முதலில் நான்கு வழிச் சாலை கொண்டதாக அமைக்கப்படும் இந்த விரைவு நெடுஞ்சாலை பின்னர், ஆறு வழிப்பாதை கொண்டதாக விரிவாக்கப்படும்.
இந்த விரைவு நெடுஞ்சாலையில் தம்புள்ளையில் திருகோணமலை நோக்கியதாக ஒரு கிளை அமைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.