-
22 மே, 2026
ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள்.." ஆ.ராசா கருத்திற்கு சிபிஎம் விமர்சனம்!
கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாத விமானங்கள்- மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டன! [Friday 2026-05-22 18:00]
![]() மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 9விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. |
பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை! [Friday 2026-05-22 18:00]
![]() முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார். |
டொலரின் மதிப்பு ரூ. 354.03ஐ தொட்டது! [Thursday 2026-05-21 16:00]
![]() அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ. 354.03 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அமெரிக்க டொலர் மாற்று விகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். |
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்! [Thursday 2026-05-21 16:00]
![]() விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. |



