புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


ஸ்பெயினுக்கே கிண்ணம்

நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ்
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் கிண்ணத்தை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ் கூறினார்.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் நாளை ஆரம்பிக்கவுள்ளன. 2010 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியிலும், ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் 2 ஆட்டங்களிலும் கோலடித்து சாதனை புரிந்தவர் டாரஸ்.
2008-ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் nஜர்மனிக்கெதிராக
கோலடித்து ஸ்பெயினை கிண்ணம் வெல்லச் செய்தவரும் இவரே.
இந்த உலகக் கிண்ண போட்டி குறித்து டாரஸ் கூறியதாவது: இந்த உலகக் கிண் ணத்திலும் ஸ்பெயின் அணிதான் பட்டம் வெல் லும். அணிக்கு கிண்ணத்தை வென்று தரக் கூடிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள் ளனர். பல்வேறு காயங்கள் காரணமாக சில காலம் அணியில் இடம்பெற முடியாமல் போய்விட் டது. இது எனக்கு சோதனையான காலம். மீண்டும் அணியில் இடம்பெற முயற்சித்து வருகிறேன். போட்டியில் விளையாட முழுத் தகுதியுடன் இருக்கிறேன் என்றார் அவர்.

நெதர்லாந்தின் ரொபின் வான் பெர்சி காயம்
நெதர்லாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொபின் வான் பெர்சி காயமடைந்துள்ளார்.
அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனை கள் நடந்து வருவதால் அவர் உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவது சந்தேகம் என வல்லு நர்கள் கணித்துள்ளனர்.
நெதர்லாந்து அணியின் முன்கள ஆட்டக்காரர் பெர்சி. 3 நாள்களுக்கு முன்னதாக பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள் ளப்பட்டன. அவரைத் தவிர மற்ற வீரர்கள் பயிற் சியில் ஈடுபட்டனர். இதனால் அவர் இந்த உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதன் கிழமை நடைபெற்ற வேல்ஸ் அணிக்கெதி ரான நட்பு ஆட்டத்திலும் அவர் பாதியில் விலகிக் கொண்டார்.
ஆனால் இந்தத் தகவலை நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் மறுத்துள் ளார். அவர் மேலும் கூறியதாவது: வான் பெர்சி நன்றாகவே இருக்கிறார். சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி குறுகிய நேரம் கொண் டது. அதனால்தான் அவர் பங்கேற்கவில்லை. அவரது உடல் தகுதி குறித்து நாங்கள் விரைவில் மதிப்பிடுவோம் என்றார் அவர். 13-ஆம் திகதி சால்வடாரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் ஸ்பெயினுடன் மோதவுள்ளது நெதர்லாந்து.
/பி/பாவில் இலஞ்சம்: மரடோனா வேதனை
உலகக் கிண்ண கால்பந்து சம்மேளனத் துக்குள்ளேயே (/பி/பா) இலஞ்சம், ஊழல் கள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் கால் பந்து ஜhம்பவான் டியு+கோ மரடோனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கத்தாரில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக் காக மிகப் பெரிய ஊழல் நடைபெறவுள்ளது. இது /பி/பாவுக்குள்ளேயே நடந்ததுதான் வேதனை. இந்த ஊழலில் கிடைத்த பணத்தை யார் பெற் றார்கள்? பணம் எங்கு போனது என்றே தெரிய வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

ad

ad