புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014

வெள்ள வடிகாலுக்குள் கழிவுநீரை விடாதீர்கள்; முதல்வர் கோரிக்கை 
வெள்ளவடிகாலுக்குள் உணவகங்களின் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் விடப்படுவதனால் யாழ் நகரப்பகுதியில் விரைவில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என யாழ்.மாநகர
சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளருக்கும் மாநகர சபை முதல்வருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாநகரசபை கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்ட வெள்ள வடிகாலுக்குள் உணவகங்களின் கழிவுகள் உட்பட மலக்கழிவுகளும் விடப்படுகின்றது.

இதனால் யாழ்.நகரப்பகுதியில் விரைவில் சுகாதார சீர்கேடு ஏற்படவாய்ப்புள்ளதுடன் தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே உணவக உரிமையாளர்கள் கவனத்தில் கொள்வதுடன் தமது ஆதனத்திற்குள்ளேயே தனியான கழிவு நீர் தொட்டி ஒன்றை அமைத்து அதனை மாநகர சபை மூலமோ அல்லது தனியார் மூலமோ வெளியேற்ற வேண்டும்

எவ்வாறாயினும் வெள்ள வடிகாலுக்குள் கழிவு நீரை விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.  இவ்விடயத்தில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது எனவே உணவங்கள் இக்கழிவு நீரை வெள்ள வாய்க்காலுக்குள் விடாது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு முதல்வர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை , இது தொடர்பில் ஏற்கனவே உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது எனினும் அதற்கு கடை உரிமையாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்காமையினாலேயே விசேட கூட்டம் இன்று கூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




 

ad

ad