புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014

விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: வலியுறுத்துகிறது அமெரிக்கா பிரிட்டன் 
 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.

 
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 26வது மனித உரிமைகள் அமர்வின் போது இந்தவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்குழுவை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கோரியுள்ளன.
 
மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் உரையாற்றிய அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தூதுவர் கீத் ஹார்பர்
 
அமெரிக்காவின் பிரேரணை அடிப்படையில் விசாரணைக்குழுவை அமைத்து விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நன்றித் தெரிவித்தhர்.
 
மேலும் அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad