புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


திமுகவில் இருந்து நீக்கம் : பழனிமாணிக்கம், முல்லைவேந்தன்,
கே.பி.ராமலிங்கம் ஆவேசம்
 


மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய 6 பேர் குழுவை தி.மு.க. தலைமை அமைத்தது. அக்குழுவினர் அளித்த அறிக்கையை அடுத்த தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.


முன்னாள் மத்திய மந்திரி பழனி மாணிக்கம், மாநில விவசாய அணி செயலாளர், கே.பி.ராமலிங்கம் எம்.பி, தர்மபுரி தெற்கு மாவட்ட  பொருப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன், தர்மபுரி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் உள்பட 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கே.பி.ராமலிங்கம், முல்லைவேந்தன் ஆகியோர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள். கட்சி எடுத்த நடவடிக்கையால் மாவட்ட செயலாளர் ஆவேசம் அடைந்துள்ளனர்.
இது குறித்து முல்லை வேந்தன், ‘’கட்சி தலைமையிடம் இருந்து என்னை நீக்கியதாக கூறப்பட்ட விளக்க நோட்டீசு இதுவரை வரவில்லை. நோட்டீசு வந்தவுடன் பதில் அளிப்பேன்.
கட்சி வேட்பாளர் தோற்றதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறுகிறார்கள். என் மீது புகார் கூறி உள்ள வேட்பாளர் வார்டில் 74 ஓட்டு தானே வாங்கி உள்ளார். அவரது வார்டில் அவருக்கு அதிக வாக்காளர்கள் ஓட்டு போட வரவில்லை. அவரது மனைவி, மச்சான், உறவினர்கள் ஓட்டுக்களே 50–க்கும் மேல் இருக்கும் போது மிகக் குறைவான ஓட்டு வாங்கியது ஏன்? அவரிடம் விளக்கம் கேட்க வேண்டியது தானே?
எல்லா இடத்திலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோற்று இருக்கிறார்களே? அதற்கு காரணத்தை கேட்டீர்களா? குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறி விளக்கம் கேட்பது எப்படி? உங்களுக்கு பிடித்தால் கட்சியில் வைத்து கொள்வீர்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுவீர்கள்.
எங்கள் மீது புகார் கூறிய வர்கள் நன்றாக கட்சி வேலை பார்த்து இருக்க வேண்டியது தானே? அவர்கள் நன்றாக வேலை பார்த்து இருந்தால் இவ்வளவு குறைவான ஓட்டு கிடைக்குமா? எண்ணிப் பாருங்கள்.
கட்சியில் வேலை செய்த எங்களை நீக்கிவிட்டு வேலை பார்க்காதவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்’’என்று கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனி மாணிக்கம்,  ‘’தலைமை என் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக என்ன குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள் என முழுமையாக தெரியவில்லை. கட்சி தோல்வி அடைந்ததற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் கட்சியில் என்ன நடந்தது. என்ன நடக்கிறது என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். இதை பொறுமையாக எதிர்கொள்வேன்’’என்று கூறியுள்ளார்.
கே.பி.ராமலிங்கம் எம்.பி. இதுகுறித்து,  ‘’எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகு தி.மு.க.வில் சேர்ந்த காலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கட்சிக்காக உழைத்து வருகிறேன். எல்லா நேரங்களிலும், எல்லா போரட்டங்களிலும் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
கடந்த 2004–ம் ஆண்டு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பு உருவாக அடித்தளமாக இருந்து செயல்பட்டவன் நான்தான். தி.மு.க. விவசாய அணி தலைமையில் நடைபெற்ற போராட்டம் தான் இந்த அமைப்பு உருவாக காரணமாக இருந்தது.
பாரதீய ஜனதா அமைச் சரவையில் தி.மு.க. அங்கம் வகித்த போது காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, அப்போதைய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வரதராஜன். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு, விவசாய சங்க தலைவர்களையும் கோவையில் 2004–ம் ஆண்டு ஜனவரி 3–ந்தேதி ஒரே மேடையில் அமர வைத்து மாநாடு நடத்தினேன். அந்த மாநாடு தான் புதிய அரசியல் கூட்டணி உருவாக வழிவகுத்தது. அந்த கூட்டணி 40–க்கு 40 எம்.பி தொகுதிகளை கைப்பற்றியது.
இப்படி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது நான்தான். அப்படியெல்லாம் உழைத்த என்னை தற்போது தற்காலிகமாக நீக்கி இருப்பதாக அறிவித்து இருப்பது எனக்கு ஏற்பட்ட அவமானதாக கருதுகிறேன்.
கட்சி தலைமையிடம் இருந்து எந்த வித நோட்டீசு வருகிறதோ–அந்த நோட்டீசில் என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதோ அந்த காரணங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கட்சி தலைமைக்கு பதில் அளிப்பேன்.
நான் கட்சியில் பல வகையில் புறக்கணிக்கப்பட்டு வந்து இருக்கிறேன். சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு முன்பு, மறைவுக்கு பின்பு என்று இரண்டு காலக் கட்டங்களிலும் நான் கட்சி தலைமையால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன். எந்தெந்த வகையில் நான் புறக்கணிக் கப்பட்டேன் என்பதை மிக விரைவில் சொல்லப்போகிறேன்’’என்று கூறியுள்ளார்.

ad

ad