புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014

பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம் 
இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தி வரும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் ஐ.நா பொதுச் செயலாளருக்கும், பாதுகாப்புச் சபைக்கும் விசேட அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
 
இந்த அறிக்கையின் அடிப்படை யிலேயே, எதிர்காலத்தில் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் நடவடிக்கைகள் அமையும் என்பதுடன், ஐ.நாவின் விசாரணையிலும் இவரது அறிக்கை தாக்கத்தைச் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கையின் ஆளும் தரப்பு அமைச்சர்களான பஸில் ராஜபக்ச­ மற்றும் ஹக்கீம் ஆகியோருடன் நேற்று முன்தினம் சந்திப்புக்களை நடத்திய உதவிச் செயலர், நேற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
 
கொழும்பு சினமன் விடுதியில் காலை 9.30 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் சார்பில் அதன் தலைவ ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
இந்தச் சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில், போரின் பின்னரான மக்க ளின் மீள்குடியமர்வு, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாண சபை அதிகாரங்கள் ஆகியன தொடர்பில் ஐ.நா. உதவிச் செயலர் பல் வேறு விடயங்களை எம்முடன் பேசினார். 
 
இது தொடர்பில் பல்வேறு கேள்விகளை அவர் எம்மிடம் கேட்டார். அதற்கு தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினால் முழு மையான பதில் வழங்கப்பட்டது. 
 
வடக்கு கிழக்கு நிலைமை
வடக்கு கிழக்கில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக இன்னமும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது சொந்த நிலங்கள் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்று கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
 
வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம் என்பதற்கு அப்பால், இராணுவ ஆட்சியே அங்கு நடைபெறுகின்றது. ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் குறித்த மாகாணங்களில் மாத்திரம் குவிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக வடக்கின் ஆளுநராக, போரை வழி நடத்திய தளபதியே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 
அரசியல் தீர்வு
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 18 சுற்றுப் பேச்சுக்கள் இலங்கை அரசுடன் நாம் நடத்தினோம். பல்வேறு தீர்மானங்களில் அரசு உடன்பட்டிருந்தாலும் எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இந்த அரசுடன் சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் பேசுவதால் பயனில்லை. 
 
நாடாளுமன்றத் தெரிவுக் குழு வின் ஊடாக இனப்பிரச்சி னைத் தீர்வு காணப்படமாட் டாது. இலங்கை அரசு தொடர்ச் சியாக ஏமாற்றி வருவதன் கார ணமாகத் தமிழ் மக்கள் விரக் தியடைந்துள்ளனர். 
 
வடக்கு மாகாணசபை
வடக்கு மாகாணசபையை இலங்கை அரசு செயற்படுத்த விடாமல் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டுள்ளது. மாகாண சபையின் பிரதம செயலாளரை மாற்று வதற்குக் கூட இதுவரையில் இலங்கை அரசு சாதகமான நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. மேலும் வடக்கு மாகாண சபையின் நல்லெண் ணத்தை வெளிப்படுத்துவதற் காக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்­வை சந்தித்த போதும், அவர் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற வில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பின் போது ஐ.நா உதவிச் செயலரி டம் குறிப்பிட்டார், என்று நாடா ளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ad

ad