புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஜூன், 2014

தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா? திரைப்பட வெளியீடு இரத்து 
news
தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதான கதையை உள்ளடக்கி இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை தயாரிப்பான வித் யூ வித் அவுட் யூ  (உன்னுடன் நீ இல்லாமல்) என்ற திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை இரத்துச் செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தை பி.வி.ஆர் சினிமா தரப்பு வெளியிடவிருந்தது. இந்தநிலையில், தமிழ் குழு ஒன்றிடம் இருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே அந்த திரையிடல் நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டால் திரையரங்கு தாக்கப்படும் எனவும் அங்குள்ளவர்கள் கடத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் இந்திய நடிகை அம்ரிதா பாட்டில், நடிகர் சியாம் பெர்ணான்டோ ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை அமரிதா தமிழ் யுவதியாகவும், பெர்ணான்டோ இளைப்பாறிய இராணுவ வீரராகவும் சித்தரிக்கப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த திரைப்படம் இலங்கையரான பிரசன்ன வித்தனகேயினால் தயாரிக்கப்பட்டு,  2012ஆம் ஆண்டு ஒப நெத்துவ ஒப எக்க என்ற பெயரில் இலங்கையில் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.