புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014


தர்கா நகரில் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறப்பு அதிரடிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது
அளுத்கம பகுதியில் கடந்த வாரம் பேரணி நடத்திய பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே சிறப்பு அதிரடிப் படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதற்கு, பௌத்த அடிப்படைவாத குழு ஒன்று மேற்கொண்ட பேரணியே காரணமாக அமைந்திருந்தது.
இதன் போது 900 சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும் அவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ள அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர, முஸ்லிம்களுக்கு இல்லை என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய காடையர்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, பாதுகாப்பு தரப்பில் குறித்த ஊடகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் குறித்த ஊடகம் இந்த செய்தியை பிரசுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad