புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014

மைக்கேல் சூமேக்கரின் பரிதாப நிலை 
news
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கரின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


உலக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த மைக்கேல் சூமேக்கர், ஆல்ப்ஸ் மலையில் நடைபெற்ற விபத்தில் சுமார் 6 மாதகாலமாக சுயநினைவை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கோமாவில் இருந்து வெளிவந்தாலும், அவரது வாழ்க்கையானது அடுத்தவர்களை சார்ந்தே உள்ளதாக சுவிஸின் பிரபல நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

சூமேக்கர், கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சுவிஸின் பிரபல நரம்பியல் நிபுணரான எரிச் ரைடரர் கூறுகையில், சூமேக்கர் தனது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை நாடியே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், இவரின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், புனர்வாழ்வு மையத்தில் அதிகநாட்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad