-

21 ஜூன், 2014

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் - ராதிகா எம்.பி 
news
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.
 
இலங்கையின் தென்பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலேயே ராதிகா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.
 
இந்த நிலையில் இலங்கையில் சிறுபான்மையினரின் மனித உரிமைகளை பாதுகாக்க கனேடிய அரசாங்கம் உரிய முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
 
ஏற்கனவே இலங்கை பல்வேறு குற்றச்செயல்களுக்கு பொறுப்பாகியுள்ளது. இந்தநிலையில் புதிய குற்றமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
எனினும் இலங்கை அரசாங்கம் அதன் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad