புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014


சுவர் இடிந்து 11 பேர் பலி: உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை முயற்சி
 சுவர் இடிந்து விழுந்த இடத்தில் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விபத்து நடந்த இடத்தை
நேரில் பார்வையிட்டார். விபத்து குறித்து அவர்,  ‘’காம்பவுண்டு சுவர் இடிந்து விபத்து நடைபெற்ற இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் காலையில் விடிந்த பின்னர்தான் பொதுமக்கள் பார்த்து உள்ளனர். காலை 6 மணி அளவில் தகவல் கிடைத்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக அதில் ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. 11 பேர் பலியாகி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிர் இழந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் பெயர் விவரம் போன்றவை முழுமையாக தெரியவில்லை.
அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இது தெரிந்த பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த விபத்து தொடர்பாக குடோன் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்த பகுதியில் அனுமதி மீறி பல குடோன்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகார்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’என்று கூறினார்.

ad

ad