புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014


அறந்தாங்கி: +2 மாணவியுடன் கண்டக்டர் தூக்கு போட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆனைகட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நீலகண்டன்(வயது 21). இவர் பேராவூரணியில் இருந்து ரெட்டைவயல் வழியாக ஜெகதாபட்டினம் செல்லும் தனியார் பஸ்சில்
கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

அறந்தாங்கி அருகே உள்ள திருவப்பாடி கிராமத்தை சேர்ந்த சிவமணி மகள் நிவிதா(16). இவர் பேராவூரணியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நிவிதா தனது ஊரில் இருந்து நீலகண்டன் கண்டக்டராக பணியாற்றி வந்த பஸ்சில் தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது நீலகண்டனுக்கும், நிவிதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த நீலகண்டனின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். தாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் இருவருக்கும் தங்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். அதனால் இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று இரவு நீலகண்டன், திருவப்பாடிக்கு சென்று நிவிதாவை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு வந்தார். அவர்கள் அங்குள்ள வயல்வெளிக்கு சென்று அங்குள்ள கருவேல மரத்தில் இருவரும் அருகருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காலை அங்குள்ள வயலுக்கு சென்ற அமரசிம்மேந்திரபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன், மரத்தில் 2 பேர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சாமிக்கண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீலகண்டன் மற்றும் நிவிதாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் துரை, தாசில்தார் கதிரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து அமரசிம்மேந்திரபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

ad

ad