புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014

news
ஷெல் மழையில் இறந்த பல்லாயிரக்கணக்கான சடலங்களை கடந்தே நாங்கள் தப்பினோம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது இறந்தவர்களின் சடலங்களைக் கடந்து தான் சென்றோம் என
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல் அதிகமாக இருந்தது. இதனால் பல ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தும் இறந்தும் உள்ளனர். நாங்கள் ஷெல்லடிக்குள்ளால ஒரு மாதிரி தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போய் கொண்டு இருக்கும் போது இறந்த பல ஆயிரக் கணக்கான சடலங்களை கடந்தே சென்றோம்.

அவர்களது விபரங்களை எவையும் இதுவரை தெரியாது.எனினும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஷெல் தாக்குதல் நடாத்திக் கொண்டுதான்  இருந்தனர்.  என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.

ஷெல் மழையில் இறந்த பல்லாயிரக்கணக்கான சடலங்களை கடந்தே நாங்கள் தப்பினோம் 

ad

ad