புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014


அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்கு
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடரவுள்ளது.
அண்மையில் பேருவளை மற்றம் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை
அல்ஜசீரா செய்தி சேவை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இணைய ஊடகத்தின் ஊடாக அல்ஜசீரா செய்தி சேவை பிழையான தகவல்களை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சமாதானத்திற்கு பங்கம் ஏற்படக் கூடிய வகையிலும் வன்முறைகளைத் தூண்டும் வகையில் அல்ஜசீரா செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், அல்ஜசீரா செய்தி சேவை ஏழு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.
பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.
தகவல்களை திரிபுபடுத்தி வெளியிட்டமைக்காக வழக்குத் தொடர இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ad

ad