புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014

எனது கணவன் காணாமல் போகவில்லை ; மனைவியொருவர் ஆணைக்குழுவிற்கு பதிலளிப்பு 
எனது கணவர் கடத்தப்படவில்லை காணாமல் போகவில்லை நான் இராணுவத்திடம் கையளித்தேன் என ஆணைக்குழுவிற்கு முன்னால் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். 


வட்டுவாகலில் 17.05.2009 ஆம் ஆண்டு புலிகள் உறுப்பினரை சரணடையுமாறு இராணுவத்தினர் அறிவித்தனர். அந்தநேரம் எனது கணவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருந்ததால் சரணடைந்தார்.

இறுதிநேரத்தில் எல்லாரும் சேர்ந்து தான் இருந்தோம். ஏனெனில் சிறிய பிரதேசத்திற்குள் இருப்பதால் எல்லோரும் கிட்டக்கிட்டவே இருந்தோம். நாங்கள் வட்டுவாகலுக்கு குடும்பமாகவே சென்றோம்.

அங்கயே தான்  இருந்த இராணுவத்தினரிடம் மதியம் 1.30 மணிக்கு எனது கணவனை ஒப்படைத்தேன். அதற்குப் பிறகு பஸ்சில் எனது கணவரை ஏற்றினர். அவருடன் 20 பேர் இருந்தனர் மேலும் பலரையும் ஏற்றினர்.

நீங்கள் வரவேண்டாம் விசாரித்து விட்டு உங்களுடனேயே விடுவம் என்று கூறினர். பிறகு எதுவும் தெரியாது. எல்லா இடமும் அறிவித்தேன் தேடிப்பார்த்தேன் எங்கும் இல்லை.

எல்லாரும் இராணுவ உடையிலேயே நின்றனர் அதனால் இராணுவத்திடமே கையளித்தேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


 

ad

ad