புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014


புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தது- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் மட்டக்களப்பு கடலில் வைத்து
இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் 41 பேரை அழைத்துக் கொண்டு அவுஸ்திரேலிய கப்பலொன்று இலங்கை சென்று சேர்நதுள்ளதாக டெய்லி டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களில் பொருளாதார அகதிகள் என இனம் காணப்பட்டவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களில் 32 சிங்களவர்களும், 9 தமிழர்களும் அடங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு கடற்பரப்பில் நின்றிருந்த இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தூதரக அதிகாரிகள் இதனை பார்வையிட்டுள்ளனர். இதனை குடிவரவு துறை அமைச்சர் மொறிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
2ம் இணைப்பு
அகதிகள் கையளிக்கப்பட்டமை வெளிப்படைத்தன்மையானது. 203 அகதிகள் தொடர்பில் தெளிவில்லை
இலங்கை அகதிகள் என்ற கூறி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில இடைமறிக்கப்பட்ட 41பேர் இலங்கையிடம் கையளிக்கப்பட்டமையானது வெளிப்படையானது என்று குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன், நியாயப்படுத்தியுள்ளார்.
இந்த அகதிகள் நேற்று இலங்கையிடம் கையளிக்கப்படடு;ள்ளனர். இதில் 39 பேர் சிங்களவர்கள் என்றும் ஏனையோர் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குடிவரவு பரிசோதனை நடவடிக்கைகளின் போது பொருளாதார அகதிகள் என்று இனங்காணப்பட்டதாகவும் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த வாரங்களில் அவுஸ்திரேலிய கடலில் இடைமறிக்கப்பட்ட இரண்டு படகுகளில் இருந்த மேலும் 203 பேர் தொடர்பில் மொரிசன் தகவல் தர மறுத்துவிட்டார்.
இந்தப் பிரச்சினை முடிவடைந்ததும் ஏனைய விடயங்களை வெளிப்படுத்தவுள்ளதாகவும் மொரிசன் குறிப்பிட்டார்.
குறித்த அகதிகள் கையளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இன்னும் இலங்கையிடம் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை இந்த நடவடிக்கை 1930ம் ஆண்டில் இடம்பெற்ற நாஸிகளின் நடவடிக்கை போன்றது என்று லிபரல் கட்சியின் முன்னாள் பிரதமர் மல்கம் பிராசெர் தெரிவித்துள்ளார்.
அகதி படகை இலங்கைக்கு திருப்பியமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அண்மையில் இலங்கை அகதிகள் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக்கடலில் வைத்து பெரிய அதிவேக படகுகள் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்ப்படும் அமைப்பான (Refugee Action Coalition Sydney) இன்று  நடத்தியது.
குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது உண்மையில் இலங்கை புகலிடக் கோரிக்கை யாளர்களுக்கு நடந்தது என்ன என்பதை மாக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என்றும்,
இலங்கை அகதிகளை மீளவும் இலங்கைக்கு  அனுப்ப வேண்டாம் எனற கோசத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அவுஸ்ரேலியா வாழ் வெள்ளை இனத்தவர்கள் தமிழர்களுக்காக பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை மிகவும் ஆக்க பூர்வமாக நடத்திய போதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் சார்பில் பெரிதாக ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.TAMILWIN.com/show-RUmsyHTaLbix0.html#sthash.P30fWoWH.dpuf

ad

ad