புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014

சங்கக்காராவின் அதிரடி வீண்: தென் ஆப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 75 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா இலங்கை சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணியுடன் இன்று தனது முதல் ஒரு நாள் போட்டியில் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஆம்லா அதிகபட்சமாக 109 ஓட்டங்களும், டி வில்லியர்ஸ் 75 ஓட்டங்களும் குவித்தனர். இலங்கை அணியில் மென்டிஸ் 61 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத் தொடர்ந்து 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
பெரேரா ( 34 ஓட்டங்கள்), டில்ஷான் (40 ஓட்டங்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். பின் களமிறங்கிய சங்கக்காரா சிறப்பாக விளையாடி 88 ஓட்டங்கள் குவித்தார்.
அதன் பின்னர் ஜெயவர்தனா 10 ஓட்டங்களில் வெளியேற அடுத்து விளையாடி அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதனால் இலங்கை அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ஆம்லா தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad