புதுக்குடியிருப்பில் விசாரணைகள் இன்றுடன் நிறைவு; இரண்டு நாளில் 54 பேர் சாட்சியம்

அத்துடன் இரண்டு நாட்களுமாக 235 புதிய முறைப்பாடுகள் ஆணைகுழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி இவர்களுக்கான விசாரணைகள் விரைவில் இடம்பெறும் என்றும் இவர்களால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டு தீர்வினை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று ஆணையாளர் சுரஞ்சனா தெரிவித்தார்.
இன்றைய தினமும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே உறவுகள் சாட்சியமளித்திருந்தனர். இன்றைய விசாரணையில் 1995 ஆம் ஆண்டு வீட்டில் இருந்து மல்லாவிக்கு சென்ற மகன் ஒருவர் வீடுதிரும்பவில்லை. இதனால் தேடித்திரியும் போது மல்லாவியில் உள்ள காடு ஒன்றிற்குள் மகனின் சைக்கிள் , அவர் கொண்டு சென்ற பை மற்றும் அவர் போட்டுச் சென்ற உடுப்பும் கிழிந்த நிலையில் காணப்பட்டது. எனினும் எனது மகனை இன்றுவரை நான் காணவில்லை என தாயார் ஒருவர் சாட்சியமளித்தார்.
மேலும் யாழ். பல்கலைக்கழக மாணவனான என் அண்ணன் இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோர் என தம்பிஒருவர் சாட்சியமளித்தார். மகன் தொடர்பில் விசாரிக்க வந்தவர்கள் எனது காதுக்குள் துவக்கை வைத்து சுடுவதாக மிரட்டி 50 ஆயிரம் ரூபாவை பெற்றுச் சென்றனர். அவர்கள் சீ.ஐ.டியினர் என தந்தை ஒருவர் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்தார். இதனைவிடவும் பலர் இறுதிக் கட்டயுத்தத்தின்போது தாம் பட்ட இன்னல்கள் நேரடி சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்கினர்.
இன்றைய விசாரணையின் போதும் இராணுவம் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளதா? அவர்கள் உதவி செய்கிறார்களா? அவர்கள் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பா? என்ற கேள்வியை அடுக்கி இருந்தனர். அத்துடன் கோழிக் குஞ்சு தொடர்பிலான விசாரணை இன்றும் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள் சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.
குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
சாட்சியமளித்தனர். இன்று 51பேர் சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்டும் 29பேர் சமுகமளித்து சாட்சியங்களை முன்வைத்தனர்.குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
அத்துடன் இரண்டு நாட்களுமாக 235 புதிய முறைப்பாடுகள் ஆணைகுழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி இவர்களுக்கான விசாரணைகள் விரைவில் இடம்பெறும் என்றும் இவர்களால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டு தீர்வினை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று ஆணையாளர் சுரஞ்சனா தெரிவித்தார்.
இன்றைய தினமும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே உறவுகள் சாட்சியமளித்திருந்தனர். இன்றைய விசாரணையில் 1995 ஆம் ஆண்டு வீட்டில் இருந்து மல்லாவிக்கு சென்ற மகன் ஒருவர் வீடுதிரும்பவில்லை. இதனால் தேடித்திரியும் போது மல்லாவியில் உள்ள காடு ஒன்றிற்குள் மகனின் சைக்கிள் , அவர் கொண்டு சென்ற பை மற்றும் அவர் போட்டுச் சென்ற உடுப்பும் கிழிந்த நிலையில் காணப்பட்டது. எனினும் எனது மகனை இன்றுவரை நான் காணவில்லை என தாயார் ஒருவர் சாட்சியமளித்தார்.
மேலும் யாழ். பல்கலைக்கழக மாணவனான என் அண்ணன் இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோர் என தம்பிஒருவர் சாட்சியமளித்தார். மகன் தொடர்பில் விசாரிக்க வந்தவர்கள் எனது காதுக்குள் துவக்கை வைத்து சுடுவதாக மிரட்டி 50 ஆயிரம் ரூபாவை பெற்றுச் சென்றனர். அவர்கள் சீ.ஐ.டியினர் என தந்தை ஒருவர் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்தார். இதனைவிடவும் பலர் இறுதிக் கட்டயுத்தத்தின்போது தாம் பட்ட இன்னல்கள் நேரடி சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்கினர்.
இன்றைய விசாரணையின் போதும் இராணுவம் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளதா? அவர்கள் உதவி செய்கிறார்களா? அவர்கள் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பா? என்ற கேள்வியை அடுக்கி இருந்தனர். அத்துடன் கோழிக் குஞ்சு தொடர்பிலான விசாரணை இன்றும் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் சாட்சியப் பதிவுகளை முடித்துக் கொண்ட குழுவினர் நாளை மற்றும் நாளை மறுதினமும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 110 பேரை சாட்சியத்திற்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.