புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014

சோமாலியாவின் பாராளுமன்றம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி 
சோமாலியாவின் பாராளுமன்ற கட்டிடம் மீது New;று தற்கொலைப்படை   தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர். 
 
இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும்,  இரண்டாவது முறையாக பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இது தொடரும் என அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் செய்திதொடர்பாளர் ஷேக் அப்தியாசிஸ் அபு முசப் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். 
 
சம்பவத்தை நேரில் பார்த்த சோமாலியா எம்.பி. அப்தி பாரி இந்த தாக்குதல் ஒரு பெரிய வெடிவிபத்து போல் இருந்ததாகவும், அதிகம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். 
 
அல்-குவைதா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்த அல்-ஷபாப் அமைப்பு நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு ஐ.நா.  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
டுவிட்டரில் ஐ.நா. வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றம் அருகில் மொகாதிசுவில் மீண்டும் ஒரு காரணமில்லாத தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சோமாலியா மக்களுக்கு அமைதியை வழங்குவதே எங்கள் விருப்பம். என்று தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே, கடந்த மே மாதம் இதேபோல் பாராளுமன்றம் மீது நடத்திய தாக்குலில் 10 பேர் பலியாயினர். இந்த ஆண்டு மட்டும் 4 முக்கிய அரசியல்வாதிகள் அல்-ஷபாப் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ad

ad