இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்
2015 ம்ஆண்டு நடைமுறைகள்
செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடியதுடன் எதிர் காலத்தில் கழகங்களின் செயற்பாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து கழகங்களும் இலங்கை உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன் கட்டாயமாக லீக்குகளில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அடையாள அட்டையை கொண்டு இருக்க வேண்டும் எனவும் அடையாள அட்டைகள் இன்றி இருப்பவர்கள் யாரும் லீக்போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வலிகாமம், பருத்தித்துறை, வடமராட்சி லீக்குகளின் பிரதி நிதிகள் கழகங்கள் கலந்துகொண்டமை குறிப்பி;டத்தக்கதாகும்.