புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

தனிநாட்டு வாக்கெடுப்பு சாத்தியமில்லை: குருபரன் தெரிவிப்பு 
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை
என்று யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் தெரிவித்தார்.
 
ஸ்கொட்லாந்து,கட்லோனிய நாடுகளின் பொது வாக்கெடுப்பு அனுபவங்கள் தரும் பாடங்கள் பற்றிய  கலந்துரையாடலும்,  தேசிய இனப்பிரச்சினையைத்  தீர்ப்பதில் பொது மக்களின் பங்களிப்பை சாத்தியமாக்குவது தொடர்பிலான அரசியல் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
 
இன்று மாலை 4.30 மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
பொது வாக்கெடுப்பு என்பதும் நிகழ்வு தான் அந்த நிகழ்வை அரசியல் மேட்டுக் குடிகள் தங்களுடைய நன்மைக்காக அதாவது அரசியலை முன்நகர்த்தும் நோக்குடன் செயற்படுகின்றது.ஆனால் பொதுவாக்கெடுப்பென்றால்  மக்கள் பங்கெடுத்தலுக்கான வாய்ப்பே ஆகும்.
 
பிரதிநிதித்துவ ஜனநாயத்திற்கு அப்பால் தமிழ் மக்களுடைய பங்கெடுத்தலானது இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பங்கெடுப்பதற்கான வாய்ப்புக்கு இந்த  பொது வாக்கெடுப்பு செயன்முறை உதவுமா என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
 
இன்றைய சூழ்நிலையில் நமக்கு தெரிந்தது என்ன அரசாங்கம் ஒன்றும் தராது, எதிர்க்கட்சியும் தமிழ் மக்களின் விடயத்தில் நிலைப்பாட்டை கொண்டுவருவதாகவில்லை. யாராக இருந்தாலும் முதலாவது ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்றே எமக்கு தோன்றுகிறது.
 
சர்வதேசமும்,தென்னிலங்கையும் எப்படி செயற்படுகின்றது என்பதற்கு துலக்கமாக அதற்கு பதில் சொல்கின்ற அரசியலாக நாம் இருக்கப் போகின்றோமா.
 
இன்று 2009ற்கு பின்னர் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வகிபாகம் என்ன என்பது பற்றி கேள்வி மக்களிடையே இருக்கின்றது. தெரிந்தெடுக்கப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் என்ற  வகையிலே இலங்கை அரச கட்டமைப்புக்குள் அதிகாரம் தரப்பினர்களுக்கு இல்லாத பட்சத்திலே பிரதிநிதித்துவ அரசியலால் சாதிக்க கூடியது என்ன என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.
 
வெறுமனே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் நின்று விடாமல் கலந்தாய்வு அரசியல் ஊடாக மக்கள் பங்கெடுத்தலை ஊர்ஜிதம் செய்யக்கூடிய செயன்முறைஅவசியம்.இதன் மூலமாக ஏற்கனவே இன்று தமிழ் அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் புறச் சக்தியின் நிலமையானது குறிப்பிட்ட வரம்பிற்குள் உட்பட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்வதற்கு தமிழ் தேசிய அரசியலில் கோலோச்சும் அரசியல் சக்திகளும் உடன்பட வேண்டும்.
 
அதற்கு மக்களின் அரசியல் அழுத்தம் அவசியம் .தமிழ் மக்கள் எந்தவித நகர்விற்கும் உட்படாமல் தேங்கி நிற்கக்கூடிய அரசியலில் இருந்து  வெளிவருவதற்கான வாய்ப்பை தேட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=822723656020438545#sthash.KTKnubxC.dpuf

ad

ad