புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அதிபரைக் கைது செய்யக்கோரி வடமாகாண சபை கடிதம்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பாடசாலை அதிபரை உடனடியாக கைது செய்யக்கோரி
மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயத்தை ஆளுநருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் அதிபர் மேற்கொண்டு ஊழல்கள் தொடர்பாக ஆவணங்களை திரட்டி நடவடிக்கை எடுக்க முயன்ற நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட குறித்த அதிபர் தனக்கு பின்னால் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோர் இருப்பதாக கூறி மாகாண சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த 2ம் திகதி வவுனியா பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய மாகாணசபை அமர்விலும் குறித்த உறுப்பினர் பேசியிருந்ததுடன், குறித்த அதிபரின் ஊழல்கள் தொடர்பில் முழுமையான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மேற்படி அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் கோரிக்கை விடுத்ததுடன், தம்மால் குறித்த அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக அந்த அதிபர் தேசிய பாடசாலை ஒன்றின் அதிபராக இருக்கும் நிலையில் அவர் தொடர்பில் மத்திய கல்வியமைச்சே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மேற்படி அதிபரை கைது செய்ய வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரை கோருவதாகவும் ஆளுநரின் பெயரை பயன்படுத்தி உறுப்பினரை அச்சுறுதியமையினால் ஆளுநருக்கு விடயத்தை தெரியப்படுத்துவதாகவும் அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

ad

ad