புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

தற்போதைய செய்தி 
சற்று முன்னர்  இன்று இரவு சாமியார் ராம்பால் கைது 
 ஹரியானாவில் போலீஸாருக்கு போக்கு காட்டிவந்த சாமியார் ராம்பால், ஒரு வழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ராம்பால் கைது செய்யப்பட்டதை செய்தியாளர்களிடம் தெரிவித்த ஹரியானா போலீஸ் டி.ஜி.பி. வாஷிஸ்த், கைது நடவடிக்கை மிகவும் கடினமான ஒன்றாக இருந்ததாகவும், இருப்பினும் கவனமாக அதனைக் கையாண்டதாகவும், ஆசிரமத்திற்குள் ராம்பாலுக்கு மனித கேடயமாக கட்டாயப்படுத்தி நிறுத்தப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை வெளியேற்றிய பின்னர் அவரை கைது செய்ததாகவும் கூறினார்.
இதன்மூலம் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் இரண்டு வார காலம் நிலவி வந்த பதற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது.
ராம்பால் கைது ஏன்?
ஹரியானா மாநிலத்தில் ஹிசார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (63). இவர் மீது கோட்டாக் செசன்ஸ் கோர்ட்டில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் 3 முறை ஆஜராகாததால் இவர் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த உயர் நீதிமன்றம், வருகிற வெள்ளிக்கிழமைக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்ய ஆசிரமத்தை நேற்று போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது சாமியாரின் ஆதரவாளர்கள் கற்களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸாருக்கும்  சாமியார் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதில் 100 போலீசார் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இருந்தும் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. அதை தொடர்ந்து இன்று 2–வது நாளாக மீண்டும் போலீசார் ஆசிரமத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனிடையே ராம்பால் மீது பிரிவினை உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சாமியார் ராம்பாலை சரணடைய வைப்பதற்காக பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்திய போலீஸார், அவரது நெருங்கிய உதவியாளர் புருஷோத்தம் தாஸை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மத்திய படை
இதனிடையே ராம்பாலை கைது செய்யும் நடவடிக்கையில் மாநில போலீஸாருக்கு உதவுவதற்காக மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்களை ஹரியானா மாநிலத்திற்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
முன்னதாக இன்று முற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா போலீஸ் டி.ஜி.பி. வாஷிஸ்த், "சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் தான் பதுங்கி இருக்கிறார். அவர் சட்டத்தின் கீழ் சரண் அடைய வேண்டும். இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.

சாமியார் ஆசிரமத்தில் தற்போது 4 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை சாமியார் ஆதரவாளர்கள் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியும்’’ என்றார். 

ad

ad