புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

லிங்கா' படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் பல ஆண்டுகளாக
சின்னத்திரை இயக்குநராக உள்ளேன். முதல்முறையாக 'முல்லைவனம் 999' என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளேன். இப்படம் முல்லை பெரியாறு, முல்லை பெரியாறு அணை மற்றும் அந்த அணையைக் கட்டிய பென்னி குக்கின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது.

புதிய திரைப்படம் தயாரிக்கப் படும்போது, அந்தப் படத்தை வேறு யாரும் உரிமை கொண் டாடாமல் இருப்பதற்காக படத்தின் கதையை சமூக வலைதளமான யூ டியூப்பில் பதிவேற்றம் செய் வது வழக்கம். அதன்படி, 'முல்லை வனம் 999' கதையை 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். மறுநாளிலிருந்து 'முல்லைவனம் 999' கதை யூ டியூப்பில் வெளியானது.

2014 பிப்ரவரி 24ல் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் 'முல்லைவனம் 999' படத்துக்கான பூஜை நடைபெற்றது. 2015 ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கவும், தமிழ் வருட பிறப்பு அன்று வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2.5.2014ல் யூ டியூப்பில் எனது 'முல்லைவனம் 999' கதை 'லிங்கா' என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந் தது. லிங்காவை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவ தாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. 'முல்லைவனம் 999' படத்தின் கதையை யூ டியூப்பில் இருந்து திருடி 'லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையைத் திருடியது சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால்,  டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர் கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நவம்பர் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'லிங்கா' படத்தின் கதையை திருடியதாக கூறப்படும் செய்தி பொய்யானது. இப்படத்தில் நான் நடிகர் மட்டும்தான். தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ கிடையாது. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ad

ad