புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து; கொல்கத்தா அணி வெற்றி
யுனைடெட் எப்.சி அணி யை வென்றது கொல்கத்தா இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த 35 ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் போடப்பட வில்லை.

பிற்பாதியில் 51 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் லூயிஸ் கார்சியா தலையால் முட்டி அபாரமாக அடித்தார்.

கவுகாத்தி அணி க்கு 58 ஆவது நிமிடத்தில் சமன் செய்ய கிடைத்த பிரிகிக் வாய்ப்பை அந்த அணி வீரர் கோகே வெளியில் அடித்து வீணடித்தார்.

முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் யுனை டெட் எப்.சி. (கவு காத்தி) அணியை வீழ்த்தியது.

இந்த போட்டி தொடரில் கொல்கத்தா அணி 2 ஆவது முறையாக யுனை டெட் எப்.சி. (கவுகாத்தி) அணியை தோற்கடித்து இருக்கிறது.

கொல்கத்தா அணி இதுவரை 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக் கிறது.      

ad

ad