புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு 
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் வேட்புமனுக்கள் கையேற்பு இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெறும்.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
 
நேற்று நண்பகல் 12 மணியுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வந்தது. இதற்கிணங்க 19 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வேட்பு மனு கையேற்பினை முன்னிட்டு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகப் பிரதேசம் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
அப்பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
வேட்பு மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து எப்பிரதேசத்திலும் ஊர்வலங்களை நடாத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளதுடன், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமெனவும் அரசியல் கட்சி ஆதரவாளர்களிடம் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ad

ad