புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

ஆண்டியா புளியங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத் திற்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம மக்கள் தமக்கான காணியை இராணுவ அதிகாரிகள் ஒப்படைக்காவிடின் இன்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.

ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரி வித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் விளையாட்டு மைதானம் ஆரம்ப பாடசாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தினை இராணுவம் தமது நிலம் என உரிமை கோருவதாகவும் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என பதாகைகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் இக்காணி பிரதேச செயலாளரினால் மக்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை இக் காணிகளை துப்புரவு செய்து முதற்கட்டமாக விளையாட்டு மைதா னத்தை அமைப்பதற்கு கிராம மக்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே இராணுவ த்தினரால் தடை விதிக்கப்பட்டதாகவும் இக் காணிகளுடன் சேர்த்து தற்போது விவசாயம் செய்து வரும் 160 ஏக்கர் வயல் நிலத்தையும் இராணுவ தேவைக்காக சுவீகரித்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் காணிகளை துப்புரவு செய்ய மக்களால் எடுக்க ப்பட்ட நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்தபோது அங்கு இராணுவ அதிகாரி வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்த போதிலும் சமரசம் ஏற்படாத நிலையில் தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளும் சமரசம் செய்ய முயற்சித்தபோதிலும் அதுவும் பயனற்று ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் இன்றையதினம் தமக்கான காணியை ஒப்படைப்பதற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் கள் தெரிவித்தனர்.  

ad

ad