புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

எம்மை அழிக்க பலவித சதிகள்! திரைமறைவில் நடக்கிறது - முதலமைச்சர்
நீரிலே எண்ணெய் , நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருள் பாவனையில் ஏற்றம்  இவையயல்லாம் தற்செயலாக நடக்கிறன என்பதை என்னால் ஏற்க முடியாது என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறுநீரக நோயாளர்களிற்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையத்திறப்பு விழா வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று  முன்தினம் முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தனது ஆத ங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது உலகில் தொற்றும் நோய்க ளால்  இறப்பவர்களைவிட தொற்றாத  நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரண ங்கள் சொல்லப்பட்டாலும் இதுவரை உறுதி யான முடிவேதும் மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை.

எனினும் விவசாய செய்கையில் கிருமிநாசினி பாவனை, செய ற்கை உரப்பாவனை, குடிநீரிலுள்ள பார லோகங்கள் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணமென எதிர்வுகூறப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மாசடைந்துள்ள எமது பிராந்தியத்தில் மக்கள் பலவித நோய்களால் பாதிப்படைந்து வருவது கண் கூடாகத் தெரிகின்றது.

நாம் எமது பேராசையின் நிமித்தமே இப்பேர்ப்பட்ட சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் இத் தருணத்தில் நாம் மறக்கக் கூடாது.

விவசாய செய்கையில் கிருமிகளைக் கொல்ல எத்தனிக்கும் நாங்கள், முன்னேற்றம் காணச் செயற்கை உரத்தைப் பாவிக்க எத்தனிக்கும் நாங்கள், எம்மை மரணத்தை நோக்கி விரைவாகச் செல்ல உதவி புரிகின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.

தாய் போன்ற, அன்னை போன்ற எமது நிலமானது எத்தகைய பாதிப்புக்களுக்குப் போரின் போதும் தற்போதும் உள்ளாகியுள்ளது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

வெடிகுண்டுகளும் நச்சுப் புகைகளும் எமது சுற்றுச் சூழலையும் நலத்தையும் பாதித்தன. உடனே நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதால் நிலத்தில் நஞ்சுகளைப் பாய் ச்சினோம்.

அவை யாவும் கீழே சென்று அடி மட்ட நீரில்; சேர்ந்து கடைசியாக நாம் அருந்தும் நீரையே மாசுபடுத்துகின்றன.

நோய்களுக்கு நாம் சிகிச்சைகள் தேடும் அதேவேளையில் நாம் இதுகாறும் இழைத்த பிழைகளை இனியும் இயற்றாது இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு வாழ்க்கை நிலையை அனுசரிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்.

எமது வட மாகாணம் இதுகாறும் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக் கூடாது.

எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும்.

எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரைமறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது.

நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருள் பாவனையில் ஏற்றம்  இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது. மக்கள் தங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

எமது வருங்காலச் சந்ததியினர் சுகத்தோடு வாழ நாம் இன்றே சுற்றுச் சூழல் மாசுக் களைத் தவிர்க்க வேண்டும். தகாத வாழ்முறைகளைத் தடை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் யாவரதும் ஒத்துழைப்பு அவ சியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

ad

ad