புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

ஜனாதிபதியின் பயணங்களுக்கு விசேட விமானம்
ஜனாதிபதி்யின் பயணங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் விசேட விமானமொன்றை வடிவமைக்க ஸ்ரீலங்கன் விமானசேவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டுள்ள எயார் பஸ் நிறுவனத்திடம் ஸ்ரீலங்கன் விமான சேவை இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
கலந்துரையாடல் அறை, படுக்கை மற்றும் ஓய்வறை வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இந்த விமானத்தை வடிவமைக்குமாறு எயார் பஸ் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்த பிரத்தியேக விமானத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக எயார் பஸ் நவீன விமானமொன்றுக்கு அமெரிக்க டொலர்களில் மூன்று தொடக்கம் ஐந்து மில்லியன் டொலர்கள் வரை செலவாகும். அதில் மேலதிக வசதிகளை ஏற்படுத்த பாரியதொரு தொகை தனியாக செலவிட வேண்டியிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad