புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நேரிடும் சு.சுவாமி மிரட்டல்

விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதீய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில்,இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை என்றைக்கும் ஏற்க முடியாது.

தீவிரவாத அமைப்பு என தெரிந்தும் வைகோ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வருவது தேசியத்தின் மீது அவர் வைத்திருக்கும் அவநம்பிக்கை யின் வெளிப்பாடு என்பதை இந்த நாடே அறியும்.

மத்திய அரசு தன் விருப்பப்படி நடக்கவில்லை என்பதற்காக மோடியை வைகோ விமர்சிக்கிறார். அதனால்தான் வைகோவை கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.

வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ஜ.க. செயலாளர் ராஜா சொல்லியிருக்கிறார்.

அதில் என்ன தவறு என புரியவில்லை. இதற்காக அவரது வீட்டை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளை எதிர்ப்பதால் என்னை முகவர் என கூறியுள்ளார். நான் யாருக்கு முகவர்  என அவர் சொல்லவில்லை.

அவர் தான் விடுதலைப்புலிகளின் முகவராக செயற்படுகிறார். தொடர்ந்து அவர் இப்படியே செயற்பட்டால் ம.தி. மு.க வையும் தடை செய்யும் முயற்சியில் இறங்குவேன் என  சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ம.தி.மு.கவை தடை செய்வோம் என்று இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவின் முகவராக சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார்... முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ சவால் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டியில்  மேற்கண்டவாறு சவால் ;விடுத்துள்ளார்.   

ad

ad