புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

சட்டசபையில் முதலமைச்சர் இருக்கை காலி : தனது பழைய இருக்கையிலேயே உட்கார்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக சட்டசபை கூட்டம் காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த இருக்கையை பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. 

எதிர்பார்ப்புக்கு மத்தியில் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தான் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையிலேயே அமர்ந்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கையை அவர் பயன்படுத்தவில்லை. அந்த இருக்கை பயன்படுத்தப்படாமல் காலியாகவே இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்து விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார். தனி இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் சட்டசபை கூட்ட தொடரில் பங்கேற்க தயார் என்று கருணாநிதி பதில் அளித்து இருந்தார். 

ஆனால் கூட்ட தொடரில் கருணாநிதிக்கு தனி இருக்கை ஒதுக்கப்படவில்லை. அதனால் அவர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதேபோல் சட்டசபையில் எந்த உறுப்பினர்களின் இருக்கைகளும் மாற்றி அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த நிலையே நீடித்தது. 

ad

ad