புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

13 ஆயிரத்துக்கு இன்னும் 13 ஓட்டங்களே தேவை 
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஒரு நாள் போட்டி களில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட இன்னும் அவருக்கு 13 ஓட்டங்களே தேவையாகவுள்ளன.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள நிலையில்,  இப்போட்டியில் அவர் அந்த மைல் கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சங்கக்கார 385 போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 88 அரைச் சதங்கள் அடங்கலாக 12,987 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன்னர் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை கடந்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (463 போட். 18, 426 ஓட்.) அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன் ரிங் (375 போட். 13,704 ஓட்.) இலங்கையின் சனத் ஜெயசூரிய (445 போட். 13,430 ஓட்.) ஆகியோரே காணப்படுகின்றனர்.     

ad

ad