-

23 டிச., 2014

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி முதல் இடத்திலும், பாஜக இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் மொத்தம் உள்ள 87 சட்டசபை தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. பாரதீய ஜனதா 26 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன. தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுவந்த நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி அதனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. 

ad

ad