புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

தேசிய வாத காங்கிரஸ், பிடிபியுடன் கூட்டணி சேர தயார்: பாரதீய ஜனதா அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் கிங் மேக்கராக பாஜக உருவாகி இருக்கும் நிலையில், தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி

சேர தயார் என்று  பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பாரதீய ஜனதா மக்கள் ஜனநாயக கட்சிக்கு அடுத்த படியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சி அரசு அமைப்பது அல்லது பிற கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளன.

பிற கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தும் பாரதீய ஜனதாவின் முடிவுகள் இருக்கும். கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நாளை  நடைபெறுகிறது. இதில் எங்களின் வாய்ப்புகள்  குறித்து நாங்கள் மதிப்பிடுவோம். அதேபோல், ஜார்கண்டில் எங்களின் முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பது குறித்தும் முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

ad

ad