புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

ஜெனிவா நெருக்கடிகளை மைத்திரி மூலமே தீர்க்க முடியும் ஐ.தே.க தெரிவிப்பு
ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி ஜெனிவாவில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக் குழுவில் எழுப்பப்பட்டுள்ள பொறுப்புக் கூறல் மற்றும் போர்க்குற்றச் சாட்டுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும்.

மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது இலங்கை நலன்களுக்கு விரோதமாக அமையும்.

இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றி பெற்றால், நாடு அதன் விளைவு களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு முடிவு கட்டப்படாமல் போனால், இலங்கை மீது பொரு ளாதாரத் தடைகள் விதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இழுத்துச் செல்லப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

போர் முடிந்த பின்னர் இலங்கை ஜனா திபதியும் வெளிவிவகார அமைச்சரும் தான் பொறுப்புக்கூறல் குறித்து விசாரிக்க ஐ.நாவை அழைத்தனர் என்பதை அவர்கள் இப்போது மறந்து விட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad