புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

சரத் பொன்சேகா அரசுடன் சேருவாரா ?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கும், எதிர்த்தரப்பிலிருந்து
ஆளுந்தரப்புக்கும் அரசியல்வாதிகள் கட்சி தாவி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பொன்சேகாவின் மருமகன் பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் சரத் பொன்சேகா அரசுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மறைமுகமாக சில பேச்சுவார்த்தைகளும்  நடத்தப்படுவதாகவும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கயான் விதானகேவிடம் ஹிரு தொலைக்காட்சி வினவியபோது இதற்கு பதிலளித்த அவர் எச்சந்தர்ப்பத்திலும் அரசுடன் இணையப்போவதில்லையென தெரிவித்தார். மேலும் எக்காலத்திலும் பணத்திற்கு விலைபோகமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டிடியுள்ளார்.

ad

ad