புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது முடிவு செய்ய முடியாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் பேராயர் எஸ்றா.சற்குணம் பேசும்போது, ''தே.மு.தி.க. சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு 3 ஆண்டுகளாக வருகிறேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது, இலவு காத்த கிளியாக, இலவம் பழுக்குமாக என்று பார்க்கிறேன். ஆனால் பழுக்கவில்லை.

இனி நீங்கள் இலந்தை பழமாக பழுக்கப் பாருங்கள். அதை நான் பறித்துக் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கக் காத்திருக்கிறேன். இந்த முறையாவது இலந்தை பழுக்கும் என்று நினைக்கிறேன்" என்று தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைப்பது பற்றி மறைமுகமாக பேசினார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ''இலந்தை பழம் பழுப்பது தொடர்பாக எஸ்றா சற்குணம் பேசியது, தி.மு.க.வைக் குறிப்பிட்டுத்தான் என எனக்குத் தெரியும். ஆனால், பழுப்பது தொடர்பாக இது முடிவு எடுக்கும் தருணம் இல்லை.

அதே நேரம், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, சிலர் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடுவதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. மக்கள் விரைவில் வெகுண்டு எழுவார்கள்" என்றார்.

ad

ad