புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக முடிவு?
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார். தமிழின அழிப்பை செய்யும், இலங்கை அதிபர் ராஜபக்சவை வாழ்த்தியதோடு, அவர் மீண்டும் அதிபராக வரவேண்டும் என்று மோடி சொல்வது தவறு'' என்று கூறினார்.
இதற்கிடையே, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஊழலற்ற கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி பா.ஜ.க.வை எரிச்சலடைய வைத்தது. குறிப்பாக தே.மு.தி.க.வை வைகோ தனது பக்கம் இழுக்க பார்ப்பது பா.ஜ. தலைவர்களை கடுப்பேற்றியது.
இந்நிலையில், ''பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ ஒருமையில் பேசி வருகிறார். அவர் இதை நிறுத்தாவிட்டால் பாதுகாப்பாக திரும்ப முடியாது. மேலும், அவர் நாவை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. அவரை எப்படி அடக்குவது என்பது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும்'' என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக கூறியிருந்தார்.
மேலும், ''பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்குள் வைகோ தானாகவே விலக வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியும் அடிக்கடி கூறி வருகிறார்.
அதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ‘‘மத்திய அரசை வைகோ விமர்சனம் செய்வது சரியல்ல’’ எனக் கூறி வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 8 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வைகோ, அதன் பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad