புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

புதுக்குடியிருப்பில் மனித புதைகுழி? தோண்டும் பணி இன்று ஆரம்பம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பகுதியல் பாரிய மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 80 பேருக்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் இந்த பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் துரைரட்ணம் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு புதைகுழி தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், காணி அளவை திணைக்களம், சட்ட வைத்திய திணைக்களம், அகழ்வாராய்ச்சி திணைக்களம் உள் ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்திய விசா ரணைகளின் போது பாரிய மனித புதைகுழி பற்றி குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வள்ளிபுரத்தில் புலிகள் சட்டவிரோத சிறைச்சாலை ஒன்றில் 80க்கும் மேற்பட்ட கைதி களை தடுத்து வைத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

நீதவானின் உத்தரவிற்கு அமைய புதை குழிகள் தோண்டப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

ad

ad