புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

ஹியூக்ஸ் இன் இறுதிச் சடங்கு நாளை 
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதற்தர போட்டி ஒன்றில் பந்து தாக்கி உயிரிழந்தார்.
 
சிட்னியில் கடந்த 25-ம் திகதி நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து அவரது தலையில் பலமாக தாக்கியது. மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் அவர் நினைவு திரும்பாமலேயே கடந்த 27ஆம் திகதி உயிரிழந்தார்.
 
ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட் உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான மேக்ஸ்வெல்லில் நாளை  நடைபெறவுள்ளது.
 
இந்த இறுதிச் சடங்கில் அவுஸ்திரேலிய வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி பயிற்சியாளர் பிளட்சர், அணி இயக்குனர்  ரவிசாஸ்திரி மற்றும் 4 வீரர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ad

ad