புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2015

வேலூர்: கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10 பேர் பலி: கலெக்டர் விசாரணை




வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிப்காட்டில் உள்ள அனைத்து தோல் தொழிற்சாலைகளுக்குமான கழிவு நீர் இந்தத் தொட்டியில் சேமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக இந்தத் தொட்டியில் நீர் சேமிக்கப்பட்டதால், சனிக்கிழமை அதிகாலை அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நடந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ad

ad