31 ஜன., 2015

அவசரமாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டாம்: சுதந்திரக் கட்சியினர்


அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தற்போதுள்ள நாடாளுமன்றம் தேசிய அரசாங்கமாக செயற்பட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.