புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2015

கழிவுநீர் தொட்டி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்



முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சிட்கோ தொழில் வளாகத்தில் தனியார் பராமரிப்பில் இயங்கி வந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை கழிவுநீர் தொட்டி உடைந்து அதிலிருந்த கழிவு நீருடன் கூடிய சேறு பக்கத்திலிருந்த தனியார் தோல் கம்பெனிக்கு சொந்தமான ஷெட்டின் மீது மொத்தமாகக் கொட்டியதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரவிக்கு 25,000 ரூபாயும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ad

ad