புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2015

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயார


இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை சமர்பிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக இந்த புதிய யோசனை அமையும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிஸ்வால், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இலங்கை விஜயத்தை முடித்து கொள்ளும் துணை ராஜாங்க செயலாளர் எதிர்வரும் 3 ஆம் திகதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள யோசனை குறித்து அவர் பிரித்தானிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ஜெனிவா சென்றும் அவர் இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

ad

ad