31 ஜன., 2015

கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தொடர்பில் இரகசிய அறிக்கை ஒன்றை புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்துள்ளனர்.
இதுவரையில் வெளியிடப்படாத பல்வேறு தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஏற்கனவே ஜே.வி.பி. முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்லின் எனப்படும் விமானங்களை இந்தோனேஷியாவிலிருந்து இலங்கைக்கு குமரன் பத்மநாதனே கொண்டு வந்துள்ளார்.
பங்களாதேஷின் விவசாய நிறுவனமொன்றிடமிருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமரன் பத்மநாதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.