ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாள்கள் கொண்டதான இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் ரரேந்திர மோடி உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது