சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து கழிவு ஒயில் கிணறுகளில் கசிந்துள்ளமைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்
தரப்பினரையும் இணைத்த கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் உள்ள பேரவைச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண சுற்றுச்சுhழல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த காலங்களின் மின்சார நிலையம் தொடர்பில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எம்முடன் இணைந்ததாக இருக்கவில்லை.
இதனால் குடிநீர்ப்பிரச்சினையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை. எனவே தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து அனைவருடனும் இணைந்து செயற்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் குறித்த விடயத்துடன் இணைந்த அனைவரையும் இணைத்து விரைவில் நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய இன்று வடக்கு அமைச்சர்கள், அரச அதிபர், பிரதேச செயலர்கள் , பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வைத்திய அதிகாரிகள் என அணைவரையும் இணைந்து தீர்வினைப் பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் நேரடியாக கண்காணித்து விரைவில் தீர்வினைப் பெறுவதற்குரிய செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.