புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக  ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
தகவல்கள் தெரிவிக்கின்றன
மொத்தமாக 20 மாவட்டங்களின் முடிவு முழுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அம் முடிவுகளில் 14 மாவட்டங்களில் மைத்திரிபால சிரிசேனவும் 06 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஸவும் வெற்றி பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 04 மாவட்டங்களின் முடிவுகள் முடிவுறவில்லை எனவும் குறிப்பிடும் தேர்தல் செயலகம், மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய மாவட்டங்களை அறிவித்தால் சில சந்தர்ப்பங்களில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதனால் முடிவுகளை தாமதப்படுத்துவதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வீதி தடுப்புகளும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad