புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளியிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 6, 217, 162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

மைத்திரிபால சிறிசேனவை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 47.58 வீத வாக்குகளைப்பெற்றுக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸ மொத்தமாக 5, 768, 090 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் 2015 - மாவட்ட ரீதியில் வெளிவந்த முடிவுகள்! இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது

ad

ad